தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மாவலிப்பட்டி பகுதி வழியாக காவிரி கூட்டுநீர் திட்ட குழாய் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குழாய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் உடைப்பை சரிசெய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

ராமச்சந்திரன், மாவலிப்பட்டி

குவிந்து கிடக்கும் குப்பைகள்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், கோட்டப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. தற்போது மழைக்காலம் என்பவதால் குப்பைகளால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், உப்பிலியபுரம்

சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

திருச்சி மாவட்டம். அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பழங்காவேரி பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இங்கு கழிவுநீர் தொட்டிக்கு செல்லும் குழாய்கள் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் சுகாதார வளாகத்தில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் வளாகம் முன்பு செடி, கொடிகள் அதிகளில் முளைத்துள்ளது. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பழங்காவேரி

பஸ் வசதி வேண்டும்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு பள்ளிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவ-மாணவிகள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்து படிக்கின்றனர். ஆனால் பள்ளி நேரங்களில் தேவையான பஸ் வசதி இலலை. மேலும் சில பஸ்களில் மாணவ-மாணவிகளை ஏற்றி செல்ல மறுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ஞானசேகரன், மண்ணச்சநல்லூர்.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா பெட்டவாய்த்தலை திருமுருகன் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், திருமுருகன் நகர்.


Next Story