தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்திற்கு இடையூறு
பெரம்பலூர் டவுன் பகுதியில் உள்ள எளம்பலூர் வரையுள்ள சாலையில், ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டைகளில் ஆங்காங்கே இளைஞர்கள் இரவு நேரத்தில் கூட்டாக அமர்ந்து கொள்கின்றனர். மேலும் அவர்கள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சாலையோரம் நிறுத்துவதினால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனை பெரம்பலூர் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.ெ
பொதுமக்கள், பெரம்பலூர்.
நள்ளிரவு நேரத்தில் பெரம்பலூருக்கு அரசு பஸ்கள் வர நடவடிக்கை தேவை
திருச்சி, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து பெரம்பலூர் வழியாக வெளியூர்களுக்கு நள்ளிரவில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பெரம்பலூர் பயணிகள் ஏற்றப்படுவதில்லை. தொலை தூர பயணிக்கும் பயணிகளை மட்டு்ம் பஸ்களில் டிரைவர், கண்டக்டர் ஏற்றுகின்றனர். இதனால் பெரம்பலூர் பயணிகள் நள்ளிரவு நேரத்தில் பஸ் நிலையங்களில் அதிகாலை வரை காத்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதில் பெண் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து த்துறை அமைச்சர் சிவசங்கர் தொகுதியான குன்னம் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்துக்கு இந்த கதி என்று பயணிகள் புலம்புகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நள்ளிரவு நேரத்தில் பெரம்பலூருக்கு செல்லும் பயணிகளை பஸ்களில் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
கால்நடைகளால் தொல்லை
பெரம்பலூர் பஸ் நிலையம் மற்றும் கடைவீதி பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடு, குதிரைகள் ஏராளமானவை சுற்றித்திரிகிறது. இந்த கால்நடைகளால் போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களை நாய்கள் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
சாலையில் பரவி கிடக்கும் மண்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு ரோடு செல்லும் சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால் வசதி புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் வேலை நடைபெற்று போது தோண்டப்பட்ட மண் தற்போது சாலையின் மையப்பகுதியில் பரவி கிடக்கிறது. இதனால் அந்த மண்ணால் சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுவததோடு படுகாயங்களுடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் பரவி கிடக்கும் மண்ணை அகற்ற நடவடிக்ைக எடுக்க வேண்டுகிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
நாய்கள் தொல்லை
பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதிகளிலும், எளம்பலூர் சாலையில் உள்ள கீரின் சிட்டி பகுதியிலும் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் சாலையில் செல்வோர்களை துரத்தி கடிக்க பாய்கிறது. மேலும் சிறுவர்களை துரத்தி, அவர்கள் கையில் வைத்திருக்கும் திண்பண்டங்களை பிடுங்கி விடுகிறது. இதனால் அந்தப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடனையே காணப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.