தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், ஒக்கரை ஊராட்சியில் உள்ள இந்திரா நகர் குடியிருப்புகளுக்குள் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் சாலைகள் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஒக்கரை.

எரியாத மின்விளக்குகள்

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை ஊராட்சி , பழங்காவிரி 3-வது வார்டு மேலதெரு தாமரை குளம் காவிரி ஆற்றுக்கு செல்லும் பாதையில் கடந்த ஒரு மாதங்களாக மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் அதிகமாக ஏற்பட் வாய்ப்பு உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்

பொதுமக்கள், பழங்காவேரி.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேலூரில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ஸ்ரீரங்கம்.

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

திருச்சி மாவட்டம், திருவரம்புர் தாலுகா, வேங்கூர், புத்தாபுரம், காந்திபுரம், ஒட்டக்குடி, கீழமுல்லக்குடி, சர்க்கார் பாளையம், பனையக்குறிச்சி ஆகிய கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சத்திரத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால் மேற்கண்ட பகுதிகளில் காலை நேரங்களில் குறைவான பஸ்களே இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் படியில் பயணம் செய்கின்றனர். இதனால் அதிக விபத்து ஏற்ட வாய்ப்பு உள்ளத. எனவே காலை நேரத்தில் மேற்கண்ட பகுதிகளில் இருந்து சத்திரத்திற்கு கூடுதலாக பஸ் இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வேங்கூர்.

நாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், லால்குடி சாய்பாபா காலனி பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், லால்குடி.


Next Story