தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, மலைக்குடிப்பட்டி சீதமேடு செல்லும் சாலையில் குறுக்கே அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இப்ப விழுமோ?எப்ப விழுமோ? என்ற நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மலைக்குடிப்பட்டி.
100 நாள் வேலை வழங்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், வேம்பங்குடி மேற்கு ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பலர் 100 வேலை திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை. இதனால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரமங்கலம்.
குறுகலான சாலையில் முளைத்துள்ள முட்செடிகள்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்திலிருந்து மேற்பனைக்காடு செல்லும் குறுகலான சாலையில் அரசு டவுன் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஏராளம் செல்வதோடு பொதுமக்களும் இருசக்கர வாகனங்களிலும் அதிகமாக சென்று வருகின்றனர். இந்த சாலையில் ஆலடிக்கொல்லையிலிருந்து மேற்பனைக்காடு வரை குறுகலான சாலை ஓரங்களில் அதிகமான முட்செடிகள் வளர்ந்து சாலையை மறைக்கிறது. இதனால் பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லும் போது மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் ஒதுங்க முடியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே சாலையோரம் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், மேற்பனைக்காடு.
சாலையில் மெகா பள்ளம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி, செங்குளம் பஸ் நிலையத்தில் இருந்து ஏ.டி. காலனி செல்லும் சாலையின் நடுவே மெகா பள்ளம் ஒன்று உள்ளது. இந்த பள்ளத்தால் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் சிரம் அடைகின்றனர். இந்த பள்ளத்தால் எந்த நேரம் வேண்டுமானாலும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், செங்குளம்.
விபத்து ஏற்படும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மலைக்குடிப்பட்டி சீத்தமேடு செல்லும் சாலையில் மின்கம்பம் ஒன்று பழுதடைந்து உள்ளது. இது எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பலத்த காற்று வீசும்போது மின் கம்பம் உடைந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மலைக்குடிப்பட்டி.