தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் பளுவஞ்சி கிழக்கு கவுண்டம்பட்டி ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடம் பழுதடைந்து உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் அச்சத்துடனே பயின்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மருங்காபுரி

கேமரா பொருத்தப்பட்டுள்ள கம்பத்தால் ஆபத்து

திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் கலெக்டர் அலுவலகத்தின் எதிர்ப்புறம் உள்ள இரும்பு கம்பத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கவும் இந்த கேமரா காவல்துறையினருக்கு பயன்பட்டு வருகிறது. ஆனால் கேமரா பொருத்தப்பட்டுள்ள இந்த கம்பம் எந்நேரமும் சாய்ந்து விழுக்கூடிய அபாயத்தில் உள்ளது. அந்த கம்பத்தின் ஒரு பகுதியை கயிறு மூலம் இழுத்து அருகே உள்ள போக்குவரத்து மண்டல அலுவலக காம்பவுண்டு சுவர் கம்பியில் கட்டி உள்ளனர். கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இத்தகைய சாலையில் தலைக்கு மேல் உள்ள ஆபத்தை உணர்ந்து அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள இரும்பு கம்பத்தை சரி செய்ய வேண்டும்.

பொதுமக்கள், திருச்சி.

குண்டும், குழியுமான சாலைகள்

திருச்சி மாநகர் முழுவது் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட அந்த பணிகள் முடிந்து பெரும்பாலான இடங்களில் சாலைகள் இன்னும் சீர் செய்யப்படவில்லை. இதனால் வாகன ஊட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த குழிகளினால் ஏற்படும் தூசு காற்றில் கலந்து மக்களின் சுவாசத்தை பாதிப்படைய செய்திகறது. மேலும் வாகனங்களும் பழுதாகின்றனர். தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபு, டி.வி.எஸ். டோல்கேட்.

அடிப்படை வசதிகள் வேண்டும்

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சமலையில் சுற்றி பல கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சாலை, குடிநீர், கழிவறை உள்பட அடிப்படை வசிதகள் நீண்ட காலமாக இல்லை. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம்ட புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

கிருஷ்ணசாமி, துறையூர்.

பழுதடைந்த அங்கன்வாடி மையம்

திருச்சி தென்னூர் சங்கீதபுரம் ஆபிசர்ஸ் காலனியில் அங்கன்வாடி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்கன்வாடி மையத்தில் கழிவறை வசதி இல்லை. மேலும் சமையல் அறையின் மேற்கூரை பழுதாகி உள்ளதால் மழைநீர் உள்ளே வருகிறது. மேலும் சமையல் அறையின் சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் உள்ளே வந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், தென்னூர்.


Next Story