தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் பற்றாக்குறை
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் குடிக்காடு காலனி தெருவில் வண்ணான் குட்டை என்னும் ஏரி உள்ளது.இந்த ஏரியில் இருந்து நீர் மூழ்கி மோட்டார் மூலம் இரவு நேரத்தில் திருட்டு மின்சாரம் எடுத்து ஒரு சில நபர்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக பல முறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க படவில்லை. அதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு திருட்டு மின்சாரம் எடுப்பதை தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தத்தனூர் குடிக்காடு.
தேங்கி நிற்கும் மழைநீர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்களை சுற்றி பள்ளம் அதிகமாக உள்ளதால் மழை நீர் எங்கு பார்த்தாலும் சூழ்ந்து உள்ளது. மேலும் புல் செடிகள் அதிகமாக வளர்ந்து உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், தத்தனூர் பொட்டக்கொல்லை.
தார்சாலையாக தரம் உயர்த்தப்படுமா?
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இருந்து கொல்லாபுரம் வரையுள்ள மண்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த மண் சாலையை தார்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.
மயான கொட்டகை வேண்டும்
அரியலூர் மாவட்டம், முத்துசேர்வாமடம் கிராம் புதுக்காலனி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள யாரேனும் இறந்தால் அவர்களை எரிப்பதற்கு மாயனா கொட்டகை இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முத்துசேர்வாமடம்.
போக்குவரத்து நெரிசல்
அரியலூர் மாவட்டம், மின்நகர் பகுதியில் அரியலூர்-கள்ளங்குறிச்சி செல்லும் சாலை ஓரத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதினால், இந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் இப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.