தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

குவிந்து கிடக்கும் குப்பைகள்

திருச்சி வயலூர் சாலை ஸ்ரீனிவாஸ் நகர் முதல் தெருவில் சாலையோரத்தில் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வயலூர்.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வெல்லூர் ஊராட்சி ஆனைப்பட்டி கிராமத்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்பு கூடாக ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இந்த மின்கம்பம் விழுந்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். றேன்.

அஜித்குமார், ஆனைப்பட்டி.

குடிநீர் பற்றாக்குறையால் அவதி

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், முருங்கை பஞ்சாயத்து புதுப்பாளையம் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் பற்றாக்குறையால் சரியாக வரவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து வருகிறது. மேலும் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுப்பாளையம்.

மின்மோட்டார் பழுது

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், தாப்பாய் கிராமத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கொள்ளிடத்தில் மழைநீர் நிரம்பி செல்வதால் இப்பகுதிக்கு குடிநீரை ஏற்றும் மின் மோட்டார் நீரில் மூழ்கி பழுதாகி விட்டது. இதனால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. தற்போதும் அதே நிலை தொடர்ந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

கிருஷ்ணன், தாப்பாய்.

மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை

திருச்சி காஜாமலை காலனி தமிழக வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் சுமார் 250 குடும்பங்கள் உள்ளது. இதில் கே.கே. நகர் செல்கின்ற பிரதான சாலையில் 100 வீடுகள் உள்ளது. இந்த சாலையில் உள்ள மின் விளக்குகளின் ஒளி சாலையில் தெரிவதில்லை. காரணம், சாலையின் ஓரம் இருக்கின்ற மரங்களின் கிளைகள் மறைத்து இருப்பதால் , இரவு நேரங்களில் இருட்டாக இருக்கின்றது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குணசேகர், காஜாமலை காலனி.


Next Story