தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
அரியலூர் மாவட்டம், தா.பழூர் மதனத்தூர் சாலை துணை மின்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக்கடையில் அனுமதியின்றி பார் செயல்படுகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக மது ஒழிப்பு போலீசார் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்து அனுமதியின்றி செயல்பட்ட பாரை மூடி சீல் வைத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுக்க போலீசாருக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், தா.பேட்டை.
குப்பை மேடாக மாறிவரும் சுடுகாடு
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் இரும்புலிக்குறிச்சியில் சிறுகடம்பூர் சாலையில் ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், ஓட்டல்களில் வீணான உணவு அதிகளவில் கொட்டி வருகின்றனர். இதனால் சுடுகாடு குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், இரும்புலிக்குறிச்சி.
வடிகால் வசதி வேண்டும்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கைக்களநாட்டார் தெருவில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் வீட்டின் உள்ளே சென்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், உடையார்பாளையம்.
தெருநாய்களால் தொல்லை
அரியலூர் நகரப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருவில் நடந்து செல்லும் குழந்தை கள், பெண்களை கடிக்க வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கடிக்க வருவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.