தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

சாலையை சீரமைக்க வேண்டும்

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தையில் வடக்குபக்க நுழைவுவாயிலில் இருந்து உள்ளே நுழையும்போது சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க வேண்டும்.

-நாராயணசாமி, பூதப்பாண்டி.

மின்விசிறி தேவை

அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட வடக்குபகவதிபுரம் உள்ளது. இந்த பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஆனால் இங்கு மின்விசிறி இல்லாததால், வெயில் நேரங்களில் குழந்தைகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழந்தைகளின் நலன்கருதி மின்விசிறி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், வடக்குபகவதிபுரம்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பள்ளிவளாகம் பகுதியில் இரும்பு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் மழை நேரங்களில் ஷாக் அடிக்கிறது. இதனால் அந்த பகுதியில் குழந்தைகள் விளையாடும் போது கம்பத்தின் மீது கை வைத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காத்திருக்கும் ஆபத்தை தவிர்க்க இரும்பு மின்கம்பத்தை மாற்றி சிமெண்டு கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-அபுதாய்ரு, குளச்சல்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சைக்காக தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் வந்து செல்கிறார்கள். மேலும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களும் வந்து செல்கின்றன. ஆனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அங்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மது சபீர், குளச்சல்.

சேதமடைந்த மின்கம்பம்

தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபெருமாள் விளை உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் பழுதடைந்து காணப்படுகிறது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வௌியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி, புதிய கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வகுமார், தென்தாமரைகுளம்.

விபத்து அபாயம்

தக்கலையில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் மணலி சந்திப்பில் குடிநீர் வினியோகிக்கும் குழாயின் வாழ்வு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சிமெண்டு சிலாப் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் சில நாட்களாக அந்த சிமெண்டு சிலாப் கொண்டு மூடாமல் திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண் ஜோயல், கள்ளங்குழி.


Next Story