தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

பன்றிகள் தொல்லை

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட புதுக்காலனி, பள்ளிவாசல்தெரு, ராஜாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் காலைநேரங்களில் பன்றிகள் படைஎடுத்துவருகின்றன. தெருக்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றும் குப்பை-கூழங்களை பன்றிகள் கிளறிவிடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பன்றிகளை பிடித்து செல்ல வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புதுக்காலனி.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் முதல் ஏரிக்கரை வரை தார் சாலை அகலமாக இருந்தது. தற்போது அந்த சாலை குடியிருப்புகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குறுகலாகவும், சிறிய ஓடை போன்று உள்ளது. இதனால் அந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மணிகண்டபிரபு, செட்டிக்குளம்.

தெருநாய்கள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தெரு நாய்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. மேலும் வாகனங்களில் செல்வோரை பின்னால் துரத்தில் சென்று கடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வி.களத்தூர்.

குளங்களை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் கிராமத்தை சுற்றி சிவகங்கை குளம், நல்லதண்ணீர் குளம், அம்மா குளம், செவன்டா குளம் என 4 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் பராமரிப்பு இல்லாமல் கருமேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்து செய்து உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்படுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மணிகண்டபிரபு, செட்டிக்குளம்.

சுகாதார வளாகம் தேவை

பெரம்பலூர் தாலுகா அலுவலகம் அருகே ஆத்தூர் சாலையில் புதிதாக நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆத்தூர், வீரகனூர், கள்ளக்குறிச்சி, அரும்பாவூர், பூலாம்பாடி, நெற்குணம், கைகளத்தூர், வெண்பாவூர், நெய்குப்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள் அலுவல் வேலை, கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக அதிக எண்ணிக்கையில் பஸ்களில் வந்து ஆத்தூர் சாலையில் உள்ள புதிய நிழற்குடை பகுதியில் இறங்கி செல்கின்றனர். மேலும் சிலர் பஸ்சுக்காக இந்த நிழற்குடையில் காத்தும் கிடக்கின்றனர். இந்தநிலையில் பயணிகள் அவசரத்திற்கு இயற்கை உபாதையை கழிக்க இப்பகுதியில் சுகாதார வளாகம் ஏதுமில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை பகுதியில் சுகாதார வளாகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story