தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள சங்கம்பட்டியில் இருந்து ஈச்சம்பட்டிக்கு செல்லும் சாலை கடந்த சில மாதத்திற்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது. இந்த சாலை தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், காரையூர்.
தெருநாள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மங்களாபுரம் கிராமம் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை சாலையில் செல்வோரை துரத்தி கடித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சாலையில் அடிக்கடி ஏற்படும் பள்ளம்
புதுக்கோட்டை மாவட்டம், நத்தம் பண்ணை ஊராட்சிக்குட்பட்ட கருவேப்பில்லான் ரெயில் கேட் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் அந்த வழியாக செல்லும் சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழைகாலங்களில் அந்த சாலையை பயன்படுத்தவே முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், நத்தம் பண்ணை.
செடிகள் அகற்றப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவலர்கள் குடியிருப்பு பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு மேல் பகுதியில் ஆங்காங்கே செடி, கொடிகள் வளர்ந்து படந்து காணப்படுகிறது. இதனால் வீடுகள் பலவீன அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆலங்குடி.
பாழடைந்து கிடக்கும் பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடம்
கறம்பக்குடியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அலுவலகம் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனால் கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து கொட்ட தொடங்கியதால் கடந்த சில ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் ஊழியர்கள் பணியாற்றவில்லை. கோப்புகள் மற்றும் பதிவேடுகளை வீடுகளில் வைத்தே பராமரித்து வருகின்றனர்.50க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் 2 அணைக்கட்டுகள் அக்னி ஆற்று வடிநில பகுதி போன்றவை இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அவசர உதவிக்காக இந்த அலுவலகத்தை நாட வேண்டியுள்ளது. எனவே பாழடைந்து கிடக்கும் இந்த பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
பொதுமக்கள், கறம்பக்குடி