தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தெருநாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டி, கொட்டப்பட்டு, வெங்கடேஸ்வராநகர், மொராய்ஸ்கார்டன் ரன்வேநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை சாலையில் செல்வோரை துரத்தி கடித்து வருகின்றன. இந்த பகுதியில் இருந்து மட்டும் நாய் கடிக்கு 10-க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசி போட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, பொன்மலைப்பட்டி.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், எடமலைப் பட்டி புதூர்,ராமச்சந்திர நகர்,சீனிவாசா தெரு பகுதிகளில் சாலை கடந்த சில மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

கீர்த்தனா, எடமலைப்பட்டி புதூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சக்திநகர் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ஸ்ரீரங்கம்.

வீணாக செல்லும் குடிநீர்

திண்டுக்கல்-திருச்சி மத்திய பஸ் நிலையம் செல்லும் சாலையில் அரிஸ்டோ ரவுண்டானா அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த வழியாக வாகன செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருச்சி.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் ஊராட்சி அரசுநிலைப்பாளையம் கிராமத்தில் அ/மி சேப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து செய்துள்ளனர். இதனால் பக்தர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொன்னுசாமி, அணியாப்பூர்.


Next Story