தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

விபத்தில் சிக்கும் வாகனங்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி முதல் பாலகட்டை வரை உள்ள சிமெண்டு சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயகற்று காணப்படுகிறது. மேலும் சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும் கீழே விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், நாட்டார்மங்கலம்.

பஸ் வசதி வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியிலிருந்து அரும்பாவூர், வேப்பந்தட்டை வழியாக பெரம்பலூருக்கு தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்களின் தேவைக்காக அரசு டவுன் பஸ் காலை 9 மணி அளவில் இயக்க வேண்டும். அந்த நேரத்தில் சரியான பஸ் போக்குவரத்து இல்லாததால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பூலாம்பாடி.

தெருநாய்கள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தெரு நாய்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. மேலும் வாகனங்களில் செல்வோரை பின்னால் துரத்தில் சென்று கடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வி.களத்தூர்.

போக்குவரத்திற்கு இடையூறு

பெரம்பலூர் காமராஜர் வளைவு சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த நிலையில் அதனருகே வைத்து கட்டிட கூலி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து கொத்தனார், மெஸ்திரி, கட்டிட ஒப்பந்ததாரர் அழைத்து செல்கின்றனர். இதனால் அந்த இடத்தில் காலை 7.30 மணி முதல் 10 மணி வரை கட்டிட கூலி தொழிலாளர்கள் நிறைந்து காணப்படுவார்கள். மேலும் அவர்கள் வரும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவததோடு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் கூடி நிற்கும் இடத்தின் அருகே வணிக வளாகத்துக்கு பொதுமக்களால் சென்று வர முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கட்டிட கூலி தொழிலாளர்களை போக்குவரத்து இடையூறு இல்லாத வேறோரு இடத்தில் நின்று வேலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

தெரு பெயர் பலகையை மறைத்து வைக்கப்படும் விளம்பர பதாகை

பெரம்பலூர் நகர்ப்பகுதியில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கும் கலாசாரம் தலை தூக்கி உள்ளது. மேலும் தற்போது நகரின் தெரு பெயர் பலகைகளை மறைத்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரம்பலூர் நகருக்கு புதிதாக வருபவர்கள் தாங்கள் செல்லும் தெருவினை கண்டுபிடிப்பதற்குள் படாதபாடு படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு பெயர் பலகைகளை மறைத்து விளம்பர பதாகை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story