தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதி

திருச்சி ஏர்போர்ட் வசந்தநகர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் வினியோகம் மிகவும் குறைவாக உள்ளது. சில வீடுகளுக்கு குழாய்களில் தண்ணீர் வராமல் பணம் செலவு செய்து லாரி மூலம் தண்ணீர் பெறவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள சாலை வசதி இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலசுப்பிரமணியன், திருச்சி.

தெருநாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் அதிக அளவிலான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க வருவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை வெளியே அனுப்ப பெரிதும் அவ்வப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரவி, தொட்டியம்.

சாலையோர பள்ளங்கள்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், கோட்டப்பாளையத்திலுள்ள சாலை பயணத்திற்கு மிகவும் அச்சுறுத்தலாக சாலையோர பள்ளங்கள் அமைந்துள்ளது. கோட்டப்பாளையம் சாவடி பஸ் நிறுத்தத்தில் இருந்து உப்பிலியபுரம் செல்லும் பிரதான சாலையோரங்களில் மண் அணைக்கப்படாமல் ஒரு அடி அளவிற்கு பள்ளம் உள்ளதால், சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள் கோட்டப்பாளையம்.

ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீழக்குன்னுப்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு யாருக்கேனும் உடல் நல குறைவு ஏற்பட்டால் துறையூர் உள்ள மருத்துவமனைக்கோ அல்லது திருச்சிக்கோ தான் சென்று சிகிச்சை பெற வேண்டியது உள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி கீழக்குன்னுப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதாநிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

கார்த்திக், கீழக்குன்னுப்பட்டி.

குடிநீர் தட்டுப்பாடு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளறை கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும்குடிநீர் முறையாக வழங்க படுவதில்லை. இதனால் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனிவாசன், திருவெள்ளறை


Next Story