தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

குண்டும், குழியுமான சாலை

கரூர் அருகே என்.கெச்.7 பைபாஸ் ரோடு ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அரிக்காரம் பாளையம், பெரியகோதூர், சின்னகோதூர் என பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள சாலைகளில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு 100-க்கும் மேற்ப்பட்ட குழிகள் தோண்ட பட்டதால் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் அந்த சாலைகளில் செல்லும் இருசக்கர வாகனங்கள், பள்ளி மாணவிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூர்.

தேங்கி நிற்கும் மழைநீர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா கட்டாரிப்பட்டியில் அரசு உயர்நிலை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்து வருதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கட்டாரிப்பட்டி.

தரைமட்ட பாலம் உயர்த்தி கட்டப்படுமா?

கரூர் மாவட்டம். கடவூர் தாலுகா, பண்ணப்பட்டி கிராமத்தில் உள்ள பழனிச்செட்டியூர்-உடையாபட்டி செல்லும் மெயின் ரோட்டில் தரைமட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தில் மழை காலங்களில் ஏராளமான மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைமட்ட பாலத்தை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பண்ணப்பட்டி.

சாலையில் கிடக்கும் ஜல்லி கற்கள்

கரூர் மாவட்டம், ஆவாரங்காட்டு புதூர் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனையடுத்து அதனை சரி செய்வதற்காக சாலைகளில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் எந்த பணியும் நடைபெற வில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்லவே மிகவும் சிரமம்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆவாரங்காட்டு புதூர்.

தெருவிளக்குகள் வேண்டும்

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் இனுங்கூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் மயானத்திற்கு செல்லும் சாலைகளின் இருபுறங்களில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், இனுங்கூர்.


Related Tags :
Next Story