தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

மாணவ-மாணவிகள் அவதி

திருச்சி மாவட்டம், சண்முகா நகர் 2-வது குறுக்குத்தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் பகலில் தெருவில் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகளை துரத்தி சென்று கடித்து வருகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை பின்னால் துரத்துகிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், சண்முகாநகர்.

அரசு விரைவு பஸ் மீண்டும் இயக்கப்படுமா ?

திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து வேலூர் வழியாக தினமும் கொப்பம்பட்டி, தம்மம்பட்டி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு அரசு விரை பஸ் இயக்கப்பட்டது. இதனால் துறையூர் பகுதியில் உள்ள மக்கள் திருவண்ணாமலை மற்றும் திருப்பதிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் திடீரென அந்த சேவை நிறுத்தப்பட்டது. இதனால் இந்த பகுதி மக்கள் திருச்சி வந்து பஸ் மாறி மாறி செல்வதால் கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பிரபு, கொப்பம்பட்டி.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கீழவாசல் ரெயில்வே கேட்டில் இருந்து ஸ்ரீரங்கம் ரெயில்நிலையம் வரை சாலையின் இருபுறமும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பாலசுப்பிரமணியம் , ஸ்ரீரங்கம்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், முள்ளால் கிராம் காலனித்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் மழைகாலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், முள்ளால்.

தெருவிளக்கு வசதி வேண்டும்

திருச்சி மாவட்டம், மலைக்கோட்டையில் ராணி பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சமூக விரோத செயல்களும் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் தெரு விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தானேஸ்வர், மலைக்கோட்டை.


Next Story