தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

கதவு அமைக்கப்பட்டது

ஆற்றூர் சந்திப்பு பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த மையத்தின் வாசல் கதவு சேதமடைந்தது. இதனால் கதவின்றி காணப்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்துக்கு புதிய கதவு அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திைய வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

ஆபத்தான பள்ளம்

ராஜாக்கமங்கலத்தில் இருந்து ஈத்தாமொழி செல்லும் மேற்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் தர்மபுரம் பகுதியில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

சாலையை சீரமைக்க வேண்டும்

அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட கோழிவிளை முதல் மனக்குன்று செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செ.அர்ஜூன் ராம், மாத்தூர்.

குப்பைகளால் துர்நாற்றம்

குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பந்தவிளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-அபுதாய்ரு, குளச்சல்.

கால்வாயை தூர்வார வேண்டும்

உண்ணாமலைக்கடை நெட்டியான்விளை பகுதியில் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை பல ஆண்டுகளாக தூர்வாராமல் காணப்படுகிறது. இதனால் கால்வாய் இருந்த இடமே தெரியாமல் புதர் மண்டி, தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் சீராக வடிந்தோட கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரவிந்த், நெட்டியான்விளை.


சேதமடைந்த மின்கம்பம்

கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட ஐரேனிபுரம் மூலையதட்டு பகுதியில் இரும்பு மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தின் அடிப்பகுதி முற்றிலுமாக வளைந்து அபாய நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜே.எஸ்.ஸ்டீபன், ஐரேனிபுரம்.

சுகாதார சீர்கேடு

கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட நித்திரவிளை சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையின் ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரூபின் ஆன்றணி, நித்திரவிளை.


Next Story