தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி 6-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்கப்படுவது இல்லை. இதனால் கடுமையான குடிநீர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், அரிமளம்.

பள்ளங்களை மூட கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் பிரதான சாலைகளில் தனியார் நிறுவனங்களால் தொலைதொடர்பு கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு அதனை சரிவர மூடாத நிலையில் உள்ளது. இதனால் அந்த இடங்களில் ஆங்காங்கே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், முக்கண்ணாமலைப்பட்டி

மனநலம் பாதிக்கபட்டவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கடைத்தெரு மற்றும் பஸ் நிலையம் பகுதிகளில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சிலர் உணவு மற்றும் இருப்பிடமின்றி சுற்றித் திரிகின்றனர். மேலும் அவர்கள் மழை மற்றும் குளிரில் அவதியடைந்து வருகின்றனர். எனவே அவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டு என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கீரமங்கலம்

கொசுக்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தினமும் ஏராளமான கொசுக்கள் பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், உடல்களில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளில் தினமும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மீனாட்சி சுந்தரம், வலையப்பட்டி.

அரசு கோழி பண்ணை மீண்டும் செயல்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு செயல்பட்டு வந்தது. தற்போது கோழிப்பண்ணை புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு சமூக விரோத செயல்கள் அதிகமாக நடந்து வருகிறது. எனவே அந்த கோழிப்பண்ணையை மீண்டும் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், திருவரங்குளம்.


Next Story