தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து நெரிசல்
அரியலூர் மார்க்கெட் பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு ஏராளமான பொருட்களை வைத்து ஆக்கிரமித்து செய்துள்ளனர். மேலும் கடைகளின் முன்பு ஆங்காங்கே ஏராளமான சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாலையை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிேறாம்.
பொதுமக்கள், அரியலூர்.
குரங்குகள் தொல்லை
அரியலூர் நகர பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் உள்ள மளிகை பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச்செல்வதுடன் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பிரபாகரன், அரியலூர்.
கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?
அரியலூர் மாவட்டம் , நாகமங்கலம் அண்ணாநகர் தெருவில் உள்ள 4 வீதிகளிலும் கழிவு நீர் செல்லும் கால்வாய் சுமார் 3 மாதமாக சுத்தம் செய்ய பட வில்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜீவ்காந்தி, நாகமங்கலம்.
சேறும், சகதியுமான சாலை
அரியலூர் மாவட்டம், கீழ்பழுவூர் அருணாசலம் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள தெருக்களில் சாலை அமைக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செம்மண் கொட்டப்பட்டது. தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் செம்மண் அனைத்தும் மழைக்கு கரைந்து தற்போது சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பஞ்சநாதன்,கீழப்பழுவூர்,
தேங்கி நிற்கும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம்
அரியலூர் மாவட்டம், சிந்தாமணி ஊராட்சியில் உள்ள கீழ சிந்தாமணி பகுதி மற்றும் மேல சிந்தாமணி பகுதியியை இணைக்கும் மண் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கீழ சிந்தாமணியில் உள்ள ரேஷன் கடை உள்ள பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மண்சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. மேலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகானந்தம், கீழசிந்தாமணி.