தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தெருநாய்கள் தொல்லை

திருச்சி காஜாமலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இவை அப்பகுதியில் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது கடிக்க பாய்கின்றன. இதனால் இப்பகுதியினர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாகுல்ஹமீது, காஜாமலை.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து கொப்பம்பட்டி, தம்மம்பட்டி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழியாக வேலூருக்கு பஸ் இயக்கப்பட்டது. இதனால் துறையூர் பகுதியில் உள்ள மக்கள் திருவண்ணாமலை கிரிவலம் மற்றும் திருப்பதிக்கு சென்று வந்தனர். இந்த பஸ் சேவை தீடிரென நிறுத்தப்பட்டது. இதனால் இந்த பகுதி மக்கள் பஸ் மாறி மாறி செல்வதால் கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கொப்பம்பட்டி.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

திருச்சி மாவட்டம், வடகாபுத்தூர் பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வடகாபுத்தூர்.

நிழற்குடை வசதி வேண்டும்

திருச்சி மாவட்டம் நெம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து லால்குடி மார்க்கமாக அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்காட்டுப்பள்ளி, திருமானூர் போன்ற பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் செல்கிறது. இதனால் நெம்பர் ஒன் பஸ் நிறுத்தம் பகுதிக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். ஆனால் இங்கு நிழற்குடை வசதி இல்லை. இதனால் வெயில் மற்றும் மழையால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ஆசைதம்பி, கோமாகுடி

மயானத்திற்கு செல்ல சாலை அமைக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தொப்பம்பட்டியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் அடக்கம் செய்வதற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மயானம் உள்ளது. ஆனால் இந்த மயானம் செல்லதற்கான கண்மாயில் தண்ணீர் இடுப்பளவு இருக்கிறது. இதனால் உடலை தூக்கி செல்வதில் மிகவும் சிரமமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தொப்பம்பட்டி


Next Story