தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

சுகாதார சீர்கேடு

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ரோடு நேசமணி நகரில் அமைந்துள்ள அரசு போக்குவரத்துக்கழக டிப்போவின் பின்பகுதியில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் குப்பைகள் நிறைந்து கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேவியர் ஜார்ஜ், நாகர்கோவில்.

செயல்பாட்டுக்கு வருமா?

கொட்டாரம் ஊராட்சிக்கு உட்பட்ட சார் பதிவாளர் சாலையில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி அமைத்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த தொட்டிக்கு தண்ணீர் இணைப்பு இதுவரை கொடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தண்ணீர் இணைப்பு கொடுத்து இந்த தொட்டியை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

-ராம்தாஸ்,சந்தையடி.

சாலையை சீரமைக்க வேண்டும்

பார்வதிபுரத்தில் இருந்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பெருவிளைக்கு திரும்பும் பகுதியில் சேதமடைந்து பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

-ரவிக்குமார், நாகர்கோவில்.

நடவடிக்கை தேவை

ஈத்தாமொழி சந்திப்பில் இருந்து காலை 7.40 மணிக்கு தர்மபுரம், ஆடராவிளை, வைராகுடி, பருத்திவிளை, கோணம், வேப்பமூடு, வடசேரி வழியாக பண்டாரதோப்புக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடைந்து வந்தனர். கொரோனா தொற்று காலத்தில் இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு பஸ்சை இயக்கப்படவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்திய பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.சி.முத்துக்குமார், ஆடராவிளை.

சேதமடைந்த சாலை

பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் இருந்து மேலாங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த சாலையில் தெரு விளக்குகளும் எரிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேந்திரன், பத்மநாபபுரம்.

விபத்து அபாயம்

அழகியமண்டபம்- திருவட்டார் நெடுஞ்சாலையில் செவரக்கோடு அருகே ஜல்ஜீவன் மிஷன் பைப்-லைன் வால்வு தொட்டி உள்ளது. இந்த தொட்டி சாலையின் நடுவே உயரமாக அமைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.ஜாண் லெனின், பத்மநாபபுரம்.


Next Story