தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

பாசி படிந்த குடிநீர் தொட்டி

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அரசு மருத்துவமனையின் முன்பு குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து தண்ணீரை பிடித்து மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் குடிநீர் தொட்டியில் பாசி படிந்து குடிநீர் அசுத்தமாக உள்ளது. இதனால் அந்த குடிநீரை யாரும் பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாடு.

சாலை சரிசெய்ய படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் இருந்து செங்கப்பட்டி வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் சில நேரங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், அன்னவாசல்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

புதுக்கோட்டையில் இருந்து வெள்ளாகுளத்திற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ஒரு அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ் காலை மற்றும் மாலை நேரங்களில் சரியான நேரத்திற்கு வருவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே வெள்ளாகுளத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், வெள்ளாகுளம்.

சாலையோர பள்ளத்தால் ஆபத்து

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து உள்ள சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையில் தனியார் தொலை தொடர்புதுறையால் மெகா பள்ளம் தோண்டபட்டுள்ளது. இந்த பள்ளம் அருகில் எவ்வித முன்னெச்சரிக்கை பலகையோ அல்லது எச்சரிக்கை தடுப்பு கயிறுகளோ இல்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி

குரங்குகள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே தினந்தோறும் காலையும், மாலையும் நூற்றுக்கணக்கான குரங்குகள் வந்து திரிகின்றன. இவை அனைத்தும் வீட்டில் உள்ள சமையல் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச்சென்று விடுகின்றது. மேலும் கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சந்தைப்பேட்டை.


Next Story