தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், அல்லூர் அக்ரஹாரம் பிள்ளையார் கோவில் அருகே காவிரி கரையில் ஒரு மின்கம்பம். உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பகுதியில் உள்ள வீரப்பன் கோவில் திருவிழாவிற்கு மின்கம்பம் உள்ள இடத்தில் இருந்துதான் வான வேடிக்கையும் நடைபெறும். இதனை பக்தர்கள் கண்டு ரசிப்பர். எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

நவநீதன், அல்லூர்.

தெருநாய்கள் தொல்லை

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட், கல்லுக்குழி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் இரவு நேரங்களில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் கடிக்க வருகிறது. இதனால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சிறுகாம்பூர்.

குடிநீர் வசதி வேண்டும்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திண்ணியம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் உப்பு கலந்து வருகிறது. இதனால் குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாவில்லை. மேலும் காசு கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திண்ணியம்.

வடிகால் வசதி வேண்டும்

திருச்சி மாவட்டம்,பாலக்கரை பகுதி செங்குளம் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான வடிகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், பாலக்கரை.


Next Story