தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 March 2023 11:13 PM IST (Updated: 16 March 2023 11:53 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

தெருநாய்களால் தொல்லை

அரியலூர் நகரப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருவில் நடந்து செல்லும் குழந்தை கள், பெண்களை கடிக்க வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கடிக்க வருவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ெபாதுமக்கள், அரியலூர்.

குப்பை மேடாக மாறிவரும் சுடுகாடு

அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சியில் சிறுகடம்பூர் சாலையில் ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், ஓட்டல்களில் வீணான உணவு அதிகளவில் கொட்டி வருகின்றனர். இதனால் சுடுகாடு குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், இரும்புலிக்குறிச்சி.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழை பெய்யும் போது மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீரை சேகரிக்க முடியாததால் இப்பகுதியில் வெயில் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மீன்சுருட்டி


கடைவீதியில் சுற்றித்திரியும் பன்றிகள்

அரியலூர் மாவட்டம், செந்துறை கடைவீதியில் நாள்தோறும் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், கடைக்காரர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செந்துறை.


Next Story