தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துமாலை அம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள ரோட்டின் நடுவில் குழி தோண்டி குடிநீர் குழாய் அமைக்கும் பணி சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்று முடிவுற்ற நிலையில், தற்போது வரை அந்த பகுதியில் தார் சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டு உள்ளனர். விரைவில் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த ரோட்டில் பயணிப்பது கடினமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-ஆதிமூலம், முக்கூடல்.

தற்காலிக நிழற்குடை அமைக்கப்படுமா?

நெல்லை-அம்பாசமுத்திரம் சாலை அகலப்படுத்தும் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வெள்ளங்குளியில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. தற்போதைய கோடைகால வெயிலின் காரணமாக அனைவரும் சாலையோரத்தில் திறந்த வெளியில் நின்று பஸ்சில் ஏறிச் செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். சாலையின் அருகே தற்காலிக நிழற்குடை அமைத்துதர கேட்டுக்கொள்கிறேன்.

- நாகையன், வெள்ளங்குளி.

சுத்திகரிக்கப்படாத குடிநீர்

மேலப்பாளையம் சொர்க்கநாதர் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள தெரு குழாயில் சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்கப்படுகிறது. கலங்கலான மாசுபடிந்த குடிநீரோடு மீன்குஞ்சும் சோ்ந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

- பேச்சிமுத்து, மேலப்பாளையம்.

வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

சேரன்மாதேவி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டின் சாலை தண்டவாளங்களுடன் சரிவர இணைக்கப்படாமல் மேடு பள்ளமாக உள்ளது. இதனால் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைவதோடு இருசக்கர வாகனங்கள் கவிழ்ந்து விழும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

- முத்துராமன், சேரன்மாதேவி.

பாதாள சாக்கடை குழியால் அபாயம்

நெல்லை மாநகராட்சி குமரன் நகரில் 20 அடி ஆழத்திற்கு பாதாள சாக்கடை நீரேற்று நிலையம் அமைப்பதற்காக குழி தோண்டி உள்ளனர். தொடா்ந்து பணிகள் மேற்கொள்ளப்படாததால் இந்த குழியில் கால்நடைகள் தவறி விழுந்து இறக்கின்றன. தவறுதலாக தோண்டப்பட்ட இந்த குழியைச்சுற்றி வேலியும் அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர். இதில் அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டுகிறேன்.

-கண்ணன், வி.எம்.சத்திரம்.

தெருநாய்கள் தொல்லை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இதுவரை சிறுவர்கள், பெரியவர்கள் என 15 பேருக்கு மேல் நாய் கடித்து மருத்துவனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆகையால் தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க கோருகிறனே்.

-ஞானசேகர், எட்டயபுரம்.

குடிநீர் தொட்டி பராமரிக்கப்படுமா?

சாத்தான்குளம் தாலுகா சாஸ்தாவிநல்லூரில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பல மாதங்கள் கடந்து விட்டது. இதனால் குடிநீர் அசுத்தமாக வருவதோடு துர்நாற்றமும் வீசுகிறது. குடிநீர் தொட்டியை முறையாக சுத்தம் செய்ய வேண்டுகிறேன்.

-தனுஷ்கோடி, சாஸ்தாவிநல்லூர்.

வீணாகும் குடிநீர்

கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெருவில் குடிநீர் வால்வு பழுதடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. அந்த வால்வை சுற்றிலும் தண்ணீர் தேங்குகிறது. அந்த தண்ணீரில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை கழுவுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஆகையால் குடிநீர் வால்வை பழுது நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

-முருகன்,கோவில்பட்டி.

சுகாதாரக்கேடு

திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. அலுவலக கீழ்பக்க சுவர் அருகில் தினசரி சந்தையின் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. தினசரி அதிக அளவில் மக்கள் கூடும் பகுதி என்பதால் நோய் பரவும் ஆபத்தும் உள்ளது. இந்த சுகாதாரக்கேட்டை உடனடியாக நீக்கிட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

-மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆண்களுக்கான சுகாதார வளாகம் பராமரிப்பின்றி உள்ளது. அதன் தரை பகுதியில் உள்ள டைல்ஸ்கள் உடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு செல்பவர்களுக்கு சிரமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை சீரமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

-செல்வமுருகன், திருச்செந்தூர்.

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து ரெயில்வே கேட் தெருவில் உள்ள மின்மாற்றியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளதாக அம்ஜத் என்பவர் அனுப்பிய பதிவு கடந்த 4-ந்தேதி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடு்த்து மின்கம்பத்தின் அடிப்பகுதியைச் சுற்றிலும் கான்கிரீட் அமைத்து பலப்படுத்தப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தொற்று நோய் பரவும் அபாயம்

பாவூர்சத்திரம் பஸ் நிலையம் உள்ளே பல மாதங்களாக பூட்டி கிடக்கும் கழிப்பிடம் முன்பு குப்பைக்கூளங்கள், கழிவு பொருட்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேட்டினால் தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறனே்.

-முருகன், கீழப்பாவூர்.

திறக்கப்படாத பூங்கா

இலஞ்சி பேரூராட்சி மீனாட்சி நகர் பூங்கா பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் விளையாடுவதற்கு இடம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகையால் பூங்காவை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-சுப்பிரமணியன், இலஞ்சி.

சேதமடைந்த சாலை

தென்காசி-அம்பை மெயின் ரோட்டில் முதலியார்பட்டியில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இங்கு ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் அருகில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-திருக்குமரன், கடையம்.

* சங்கரன்கோவில் அருகில் உள்ள பெருங்கோட்டூர்-கே.ஆலங்குளம் சாலை பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் முற்றிலும் பழுதடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதோடு வாகனங்களும் அடிக்கடி பழுதடைகின்றன. அந்த சாலையை சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-ஜெயராஜ், கே.ஆலங்குளம்.


Next Story