தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

நாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், குழுமணி கோப்பு பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும்மக்களை கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குழுமணி

அடர்வனக் காடுகள் அமைக்க வேண்டும்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம்,வடக்கு தத்தமங்கலம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான நிலப்பரப்பு மாரியம்மன்கோவில் அருகில் சுமார்10 ஏக்கர் உள்ளன. தமிழகத்தில் மியவாக்கி திட்டத்தின் கீழ் அடர்வன காடுகளை அமைக்கும் பொருட்டு நிறைய மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

மழைவளம் பெறவும், மரங்கள் நிறைந்த வனத்தை அமைக்கும் பொருட்டும் வடக்கு தத்தமங்கலத்தில் அடர்வனக்காடுகளை உருவாக்க

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், வடக்கு தத்தமங்கலம்

நுழைவு வாயிலை சீரமைக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த பச்சாம்பேட்டை வளைவு பழங்கால போர்ச்சின்னம் நுழைவாயில் கடந்த 2022-ம் ஆண்டு ரூ.7 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இந்த நுழைவாயில் ஒரு வருடத்திற்குள் மீண்டும் பழுதடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதமக்கள், பச்சாம்பேட்டை.

தேங்கி நிற்கும் மழைநீர்

திருச்சிமாவட்டம், லால்குடி-திருச்சி மெயின் ரோட்டில் தாலுக்கா அலுவலகம் செல்லும் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இச்சாலையில் வழியாக பஸ், கார் வேகமாக செல்லும் போது நடந்து செல்வர் மீது தண்ணீர் வாரி இறைக்கும் படுகிறது. அதனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், லால்குடி.

மேம்பாலம் கட்டம் கோரிக்கை

திருச்சி மாவட்டம், வையம்பட்டி கிராமம் திண்டுக்கல்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையுடன் கரூர், பொன்னமராவதி ஆகிய நெடுஞ்சாலைகள் இணைவதால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. எனவே வையம்பட்டி-பொன்னமராவதி சாலையில் உள்ள ரெயில் கேட்டில் உயர்மட்ட மேம்பாலம்கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதமக்கள், வாகன ஓட்டிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வையம்பட்டி.


Next Story