தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் தேவைக்காக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு அருகில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும், கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகரிகள் உடனடியாக குடிநீர் தொட்டியை புதிதாக கட்டிட தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ்பபகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அன்னிமங்கலம்.

சுற்று சுவர் கட்டப்படுமா?

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியின் சுற்று சுவர் உடைந்து பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் அச்சத்துடேன சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்று சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதமக்கள், சிறுகடம்பூர்.

சாலை சீரமைக்கபடுமா?

அரியலூர் மாவட்டம், செந்துறை சமத்துவப் புரத்தில் இருந்து பாசாளம் செல்லும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்வே மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், பாசாளம்.

கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலைகளில் மாலை நேரத்தில் படுத்து கொள்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ராஜா, மீன்சுருட்டி.

போக்குவரத்து நெரிசல்

அரியலூர் மார்க்கெட் கடைவீதி பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு ஏராளமான பொருட்களை வைத்து ஆக்கிரமித்து செய்துள்ளனர். மேலும் கடைகளின் முன்பு ஆங்காங்கே ஏராளமான சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாலையை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிேறாம்.

பொதுமக்கள், அரியலூர்.


Next Story