தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

சாலை சீரமைக்கப்பட்டது

மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோட்டாசன் அரசு உயர்நிலைப்பள்ளிக்குச் செல்லும் சாலை உள்ளது. இந்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.

வேகத்தடை அமைக்க வேண்டும்

சந்தையடி சந்திப்பு பகுதியில் 3 சாலைகள் சந்திக்கின்றன இந்த பகுதியில் அரசு பள்ளியும் உள்ளது. ஆனால் அந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராம்தாஸ், சந்தையடி.

வாகன காப்பகம் தேவை

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பார்வதிபுரத்தில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பயணிகள் தங்களது வாகனங்களை பாலத்தின் அடிவாரத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அடிக்கடி வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் நடந்து வருகிறது. எனவே அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் வாகன காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ராஜன், களியங்காடு.

சீரமைக்க வேண்டும்

பீச்ரோட்டில் இருந்து ஈத்தாமொழி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் வடக்கு சூரங்குடி பகுதி சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாம்சன், ஈத்தாமொழி.

விபத்து அபாயம்

திங்கள்சந்தை பேரூராட்சிக்குட்பட்ட செட்டியார்மடம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தர்மசாஸ்தா கோவில் செல்லும் சாலையோரத்தில் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் பக்கச்சுவர் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பக்கச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராம், செட்டியார்மடம்.

சீரமைக்க வேண்டிய சாலை

ஆற்றூர் பஞ்சாயத்துக்குட்பட்ட முள்ளுவிளையில் இருந்து கொற்றன்விளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெ.அகஸ்டின், ஆற்றூர்.


Next Story