தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

மின்கம்பம் சரி செய்யப்படுமா?

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், வளைவு சாலை அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மிகவும் மோசமாக உள்ளது. மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிர் இழப்பு கூட ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆபத்தான மின்கம்பங்களை மாற்றிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

ராஜசேகர், அய்யம்பாளையம்.

ஆகாயதாமரைகளை அகற்ற கோரிக்கை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், பாலத்துறை வாய்க்கால் தண்ணீரை புகழூர், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு விவசாயத்திற்கு பயன்பட்டு வருகின்றன. தற்போது பாலத்துறை வாய்க்காலில் ஆகாயத்தாமரை வளர்ந்து தேங்கி கிடக்கும். எனவே விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகாயதாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

ஆசைதம்பி, பாலத்துறை,

பயணியர் நிழற்குடை வேண்டும்

கரூர் மாவட்டம், வெள்ளியணை சாலையில் கல்லுமடை அம்மன் நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. மருதம்பட்டி காலனி, பெருமாள் பட்டி காலனி, மாணிக்கபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வேலை நிமித்தமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த பஸ் நிறுத்த பகுதிக்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனர். பஸ் ஏற காத்திருக்கும் பொதுமக்கள் வெயில், மழை நேரத்தில் அவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள பயணியர் நிழற்குடை இல்லாமல் அவதிபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணியர் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுகக வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பார்த்திபன், மருதம்பட்டிகாலனி

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கரூர்-கோவை சாலையில் உள்ள விசாகா நகர் செல்லும் வழியின் முன்பு சாலையின் ஓரத்தில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியை கடக்கும் போது துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, மீண்டும் அப்பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விசாகா நகர்.

தள்ளுவண்டி கடைகளால் அவதி

கரூர் காந்கிராமம், அரசு மருத்துவக்கல்லூரி அருகில் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தள்ளுவண்டி கடைகள் அதிகம் உள்ளன.

இதனால் அங்கு நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்கள் தங்ளது இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்ஙகு இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். அங்குள்ள தள்ளுவண்டி கடை முன் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் தடுக்கின்றனர். மற்றும் அவசர ஆம்புலன்ஸ் செல்லமுடியாத அளவில் ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கரூர்.


Next Story