தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீணாகும் குடிநீர்
திருச்சி மாவட்டம்,வெள்ளக்கல்பட்டி கிராமம் தெற்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள விநாயகர் கோவில் தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகந்தன், வெள்ளக்கல்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், புடலாத்தி கிராமத்தில் இருந்து வெங்கடாசலபுரம் கிராம் வழியாக செல்லும் சுமார் 5 கிலோ மீட்டர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலு, புடலாத்தி.
குடிநீர் பற்றாக்குறையால் அவதி
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 23-வது வார்டு கல்லாத்துபட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெய்த கன மழையில் குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து விட்டது. இதனால் தற்போது இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொததுமக்கள், கல்லாத்துறை.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி மாவட்டம், கள்ளிக்குடி மார்க்கெட் அருகே ஈகைடவுன் பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த மோட்டார் சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதேபோல் ஏராளமான மின்கம்பங்களும் இதே நிலையில் தான் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதமக்கள், சமூக ஆர்வலர்கள் கேரிக்கை விடுத்துள்னனர்.
மலையாண்டி, ஈகைடவுன்
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள கரிகாலி ரெட்டியார்பட்டி பிரிவு சாலையில் இருந்து ரெட்டியார்பட்டி வரை சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தினேஷ்குமார், கரிகாலி