தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

சாலையின் நடுவே மின்கம்பம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் மருதூர் சாலையின் நடுப்பகுதியில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே பெரிய அளவிலான வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

க.சசிக்குமார், சமயபுரம்.

பஸ் வசதி வேண்டும்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், வீரமச்சான்பட்டியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு சேனப்பநல்லூர் கிராமத்தில் இருந்து சென்று வர பஸ் வசதி இல்லை. எனவே துறையூரிலிருந்து கழிங்கமுடையான்பட்டி, சேனப்பநல்லூர், நாகமநாயக்கன்பட்டி, காவிரிப்பட்டி, வீரமச்சான்பட்டி, கண்ணனூர் பாளையம் வழியாக முசிறி வரை அரசு நகர பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனந்தகுமார், சேனப்பநல்லூர்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாநகராட்சி 41-வது வார்டுக்கு இந்திரா நகர் தெற்கு விஸ்தரிப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலைடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்வே பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகைள சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கரன், தெற்கு விஸ்தரிப்பு

வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், சிங்களாந்தபுரம் கிராமத்தில் இருந்து கார்டன் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலைடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நடந்து செல்வே பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஜய், சிங்களாந்தபுரம்

தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, சிறுகனூர்-லால்குடி சாலையானது, திருச்சி-சென்னை, திருச்சி-சிதம்பரம் ஆகியவற்றை லால்குடி நகரத்துடன் இணைக்கும் முக்கியமான வழியாக உள்ளது. மாலை நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புபவர்கள், பள்ளி, கல்லூரி சென்று திரும்புவோர் இருளில் பயணிக்க வேண்டி உள்ளது. மேலும் இரவில் குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக பூவாளூர் முதல் தச்சன்குறிச்சி வரையாவது சாலையோரத்தில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தச்சன்குறிச்சி.


Next Story