தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

சுகாதார சீர்கேடு

நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கரவிளாகம் பகுதியில் ஒரு கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் உள்ள சில வீடுகளில் இருந்து கழிவுநீரை கால்வாயில் பாயும்படி விட்டுள்ளனர். இதனால், தண்ணீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், கரவிளாகம்.

சாலை சீரமைக்கப்படுமா?

இறச்சகுளத்தில் இருந்து களியங்காடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

அழகப்பபுரம் பேரூராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது. மேலும், சுகாதார நிலையத்தை சுற்றியும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும், பொதுமக்கள் கட்டிடத்தின் அருகில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துணை சுகாதார நிலையத்தை சுற்றி வளர்ந்திருக்கும் புதர்களை அகற்றி கட்டிடத்துக்கு வர்ணம் தீட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-ஜஸ்டின், அழகப்பபுரம்.

பயணிகள் அவதி

திருவிதாங்கோடு அருகே வட்டம் சந்திப்பு பஸ் நிறுத்தம், கோவில் வட்டம் பஸ் நிறுத்தம் மற்றும் தபால்நிலையம் ஆகிய பகுதியில் தொலைத்தொடர்பு கேபிள் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டது. அதன்பிறகு அந்த பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. இதனால்,பஸ் நிறுத்தத்துக்கு வரும் பயணிகள், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமாரபத்மநாபன், திருவிதாங்கோடு.

நடவடிக்கை தேவை

கன்னியாகுமரி பிள்ளையார்கோவில் தெருவில் ஒரு தனியார் விடுதி உள்ளது. இந்த விடுதியின் தெற்கு பகுதியில் உள்ள தெருவில் அமைந்துள்ள ஓடையில் மண் நிரம்பி கழிவுநீர் வடிந்தோடாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.எ.நாராயணன், கன்னியாகுமரி.

போக்குவரத்து நெருக்கடி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் சாலையில் பல பள்ளிகள் உள்ளன. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் காலை, மாலை நேரங்கள் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த நெருக்கடியில் ஆசாரிபள்ளத்துக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வானங்களும் சிக்கி வருகிறது. எனவே, காலை, மாலை நேரங்களில் அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆல்வின், வடக்கு கன்னங்குறிச்சி.


Next Story