தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார்பெட்டி

கன்னியாகுமரி

சாலையின் அவல நிலை

காரங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள சாலையின் அவல நிலையை தான் படத்தில் பார்க்கிறீர்கள். கடந்த சில ஆண்டுகளாக சாலை பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையில் பாதசாரிகள் நடந்து செல்லவும், வாகனத்தில் செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரதீஷ், வெட்டுவிளை.

குரங்குகள் அட்டகாசம்

மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அமராவதிவிளை கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி வருகின்றன. அவை வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள உணவு பொருட்களை தூக்கி சென்று விடுகின்றன. மேலும் வீட்டு கதவை திறந்து வைத்தால் உள்ளே புகுந்து விடுகிறது. பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சகாய ரவின்ஸ், அமராவதிவிளை.

மூட வேண்டிய குழி

இரணியல் பேரூராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட ஆழ்வார் கோவில், பள்ளி விளை பகுதியில் சுமார் 2 வாரங்களுக்கு முன்பு தண்ணீர் குழாய் அமைப்பதற்கு குழிதோண்டப்பட்டது. அந்த குழியை மூடாமல் விட்டு சென்று விட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே அந்த குழியை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏ.நாகமணி, ஆழ்வார்கோவில்.

பள்ளத்தை மூடவேண்டும்

நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அங்கு தற்போது தடுப்புவேலி அமைத்து உள்ளனர். அதை அகற்றி விட்டால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மேலும் தாமதிக்காமல் சாலையில் உள்ள பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வே.கார்த்திக், கோட்டார்.

காத்திருக்கும் ஆபத்து

ராஜாக்கமங்கலம் மின் வாரிய எல்லைக்கு உட்பட்ட பரமன்விளைபகுதியில் மின் கம்பத்தின் மேல் பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மின்கம்பம் எப்போது விழலாம் என்ற நிலையில் உள்ளது. எனவே காத்திருக்கும் ஆபத்தை உணர்ந்து மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துகிருஷ்ணன், பரமன்விளை.


Next Story