'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 July 2022 9:49 PM IST (Updated: 19 July 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

வழிகாட்டி பலகைகள் சேதம்

ெநல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள்நகர் வழியாக கருங்குளம் சிந்தாமணி செல்லும் சாலையில் சின்ன மூலைக்கரைப்பட்டி விலக்கு வழியாக கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த வாகனங்கள், அங்குள்ள வழிகாட்டி பலகைகள் மற்றும் இரும்பு தடுப்புகளை தேசப்படுத்தி உள்ளன. எனவே, அதிகாரிகள் இதில் உரிய நடவடிக்கை எடுத்து, வழிகாட்டி பலகைகள், இரும்பு தடுப்புகளை மீண்டும் அமைக்க வேண்டுகிறேன்.

- மாரிமுத்து, பெருமாள்நகர்.

வீணாகும் குடிநீர்

ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் ஆத்தங்கரை பள்ளிவாசல் மேற்கு பகுதியில் திருவம்பலபுரம் செல்லும் சாலையில் சிறிய பாலம் ஒன்று உள்ளது. அதன் அருகில் செல்லும் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீ்ர் வீணாக வெளியேறி வருகிறது. அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டுகிறேன்.

- கோபாலகிருஷ்ணன், ஆத்தங்கரை பள்ளிவாசல்.

ேவகத்தடை வருமா?

திசையன்விளை பேரூராட்சி 2-வது வார்டு வாசக சாலை மோகனகாந்தி தெரு சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க அதன் இருபுறமும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- ஆல்பர்ட், திசையன்விளை.

பயன்படாத நிழற்கூடம்

ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் பஞ்சாயத்து முருகானந்தபுரத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதாவது அதன் முன்புறம் உள்ள சாலை உயர்த்தப்பட்ட பிறகு, நிழற்கூடம் பள்ளத்துக்குள் உள்ளது. மேலும் அங்கு இருக்கைககளும் இல்லை. இதனால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

வேகத்தடைக்கு வர்ணம் வேண்டும்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் அமைந்துள்ள புதுக்கிராமம் பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள 2 வேகத்தடைகளிலும் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள், வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அந்த வேகத்தடைகளில் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- பி.மணிகண்டன், கடம்பன்குளம்.

போக்குவரத்து நெரிசல்

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் மெயின் பஜார் சாலை குறுகலாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏறபடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் கடையம் மெயின் பஜார் சாலையும் குறுகலாக உள்ளது. இந்த சாலைகளை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- அம்ஜத், முதலியார்பட்டி.

அடிப்படை வசதி இல்லாத அரசு பள்ளி

செங்கோட்டை தாலுகா புளியரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால், இ்ங்கு போதிய குடிநீர் வசதியோ, கழிவறை வசதியோ இல்லை. கழிவறைகள் பயன்படுத்த முடியாத வகையில் மிகவும் மோசமாக உள்ளது. எனவே, மாணவ-மாணவிகளின் நலன் கருதி, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

ஆபத்தான மின்கம்பம்

கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரம் விலக்கில் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் சாலையில் விநாயகர் கோவில் அருகில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பம் சேதம் அடைந்து, எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக அந்த ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

- அம்ஜத், முதலியார்பட்டி.

கூடுதல் ஊழியர் தேவை

கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு ஆதார் எடுப்பது, புகைப்படம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் போதிய ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அந்த சேைவயை பெற வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் கூடுதல் ஊழியரை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- பா.மணிகண்டன், கடையநல்லூர்.

பஸ் நின்று செல்லுமா?

நெல்லையில் இருந்து சுரண்டை வழியாக திருமலைக்கோவில் செல்லும் அரசு பஸ் (தடம் எண்-101) கீழக்கருபுளியூத்து கிராமத்தில் தொடர்ந்து நிற்காமல் செல்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அந்த பஸ் அங்கு நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- நல்லையா, கீழக்கரும்புளியூத்து.

தெரு குழாய் சரிசெய்யப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி 17-வது வார்டு பாரதிநகரில் தெருகுழாய் உள்ளது. அதில் நல்லி பழுதடைந்ததால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே, தெருகுழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- செந்தில்குமரன், பாரதிநகர்.

நோய் பரவும் அபாயம்

சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாணிக்கவாசபுரம் செல்லும் தெருவில் வாறுகால் வசதி இல்லை. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால், கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, அங்கு வாறுகால் வசதி அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

- ஜேசு கோபின், பிரகாசபுரம்.

அடிபம்பு சரிசெய்யப்படுமா?

ஓட்டப்பிடாரம் தாலுகா ஒட்டநத்தம் கிராமம் கிழக்கு தெருவில் புதிய மயானம் உள்ளது. இங்குள்ள அடிபம்பின் மேற்பகுதி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அதை கயிறு கொண்டு கட்டி வைத்து உள்ளனர். அந்த அடிபம்பை சரிசெய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

- சுகுமார், ஒட்டநத்தம்.

செயல்படாத இ-கழிவறை

தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஆண்கள் பயன்பெறும் வகையில் இ-கழிவறை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அது சரிவர செயல்படவில்லை. இதனால் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இ-கழிவறை முறையாக செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- கருப்பசாமி, தூத்துக்குடி.

ஆபத்தான மரம்

விளாத்திகுளம் அருகே புளியங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த புளியமரம் உள்ளது. அந்த மரத்தின் உட்புறம் வெறும் கூடாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அதிகமாக காற்று வீசும்போது கீழே விழக்கூடிய அபாயம் உள்ளது. அந்த பள்ளி வளாகம் அருகே ஒரு சில வீடுகள் உள்ளன. எனவே, ஆபத்தான மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- மாரியப்பன், விளாத்திகுளம்.

1 More update

Next Story