தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

புதர்கள் அகற்றப்பட்டன

மணவாளக்குறிச்சி அருகில் உள்ள யானை வரவழைத்த பிள்ளையார் கோவில் அருகில் புதர் செடிகள் வளர்ந்து இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பஸ் இயக்க வேண்டும்

இறச்சகுளம் முதல் சாமிதோப்பு வரை காலையில் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த பஸ்சை நம்பியிருந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராணி, இறச்சகுளம்.

உடைந்த மின்கம்பம்

தாழக்குடி பேரூராட்சியில் மீனமங்கலத்தில் இருந்து வெள்ளமடம் ஆத்தங்கரை செல்லும் சாலையில் சந்தவிளை புதிய பாலம் அருகில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் கொண்டை பகுதி மிகவும் உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே, பேராபத்து ஏற்படும் முன்பு உடைந்த மின்கம்பத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.எஸ்.சிதம்பரதாணு, தாழக்குடி.

சுகாதார சீர்கேடு

கருங்கலில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் சாலையில்தெருவுக்கடை பகுதியில் சாலையோரம் மீன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு மீன் வியாபாரம் ெசய்கிறவர்கள் கழிவுகளை சாலையோரம் கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோர பகுதியை தூய்மையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெகன், தெருவுக்கடை.

மரத்தை அகற்ற வேண்டும்

இடைக்கோடு பஞ்சாயத்து அலுவலகம் அருகில் கண்ணறக்கோடு என்ற இடத்தில் சாலைேயாரம் மிகவும் பழமையான ஒரு மாமரம் நிற்கிறது. இந்த மரத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அதன் அருகே குடியிருப்புகள், மின்மாற்றி போன்றவை உள்ளன. காற்று மழைக்காலங்களில் மரம் முறிந்து விழுந்து பேராபத்து ஏற்படும் முன்பு அதை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.சுதர்சனராஜ், இடைக்கோடு.

சாலையில் பள்ளம்

திங்கள்சந்தையில் இருந்து குளச்சல் செல்லும் சாலையில் கல்லுக்கூட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருகிறவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அசோக், கல்லுக்கூட்டம்.

1 More update

Next Story