தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

நடவடிக்கை எடுக்கப்பட்டது

சுசீந்திரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த சாய்வுதள பாதையின் மேலே 2 படிக்கட்டுகள் இருந்ததால் சக்கர நாற்காலிகளில் வரும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாய்வு தளத்தை சரியாக சீரமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சாலையில் பள்ளம்

நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரத்தில் கலைமகள் படிப்பகம் அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதை உடனே சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.உலகப்பன், கரியமாணிக்கபுரம்.

வாகன ஓட்டிகள் அவதி

பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட நயினாபுதூர் முதல் காட்டுவிளை காலனிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அ.அனுபவ், தெங்கம்புதூர்.

சாலையை சீரமைக்க வேண்டும்

கருங்கல் அருகே உள்ள இலவன்படவிளையில் இருந்து படுவாகுளம் பகுதிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் பயணம் செய்கிறார்கள். தற்போது இந்த சாலையில் உள்ள தார் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஜெகன், ெதருவுக்கடை.

தெருநாய்கள் தொல்லை

செம்பருத்திவிளை அருகே ேகாதநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொற்றிக்கோடு போலீஸ் நிலையம் போன்றவை இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றி வருகின்றன. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருந்து வாங்க வரும் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் அந்த வழியாக நடந்தும், வாகனங்களிலும் செல்கிறவர்களை நாய்கள் கடிப்பதற்காக துரத்துகின்றன. எனவே தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெலிக்ஸ் ராஜ், செம்பருத்திவிளை.

சீரமைக்க வேண்டிய சாலை

மெதுக்கும்மல் ஊராட்சியில் கைப்பூரிவிளையில் இருந்து முளங்குவிளை வழியாக முள்ளிறங்கிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை பல ஆண்டுகளாக செப்பனிடப்படவில்லை. இதனால் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இந்த சாலைைய சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாலைைய சீரமைக்கசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரமேஷ், மெதுக்கும்மல்.


Next Story