தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

நடவடிக்கை எடுக்கப்பட்டது

தக்கலையில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலையில் மணலி சந்திப்பில் குடிநீர் வினியோகிக்கும் குழாயின் வால்வு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சிமெண்டு சிலாப் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் சில நாட்களாக அந்த சிமெண்டு சிலாப் கொண்டு மூடாமல் திறந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிமெண்டு சிலாப்பை சரி செய்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

குப்பைகள் அகற்றப்படுமா?

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழத்தோட்டம் பகுதியில் சாலையின் மேற்கு பகுதியில் வீடுகளை இடித்த குப்பைகளை கொட்டி குவித்து வைத்துள்ளனர். மேலும், அதே சாலையில் அமைந்துள்ள தீயணைப்பு மையத்தின் அருகே தென்னை மர மூடுகளை குவித்து வைத்துள்ளனர். இதனால், அந்த பகுதி மாசடைந்து வருகிறது. எனவே, குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராம்தாஸ், சந்தையடி.

ஆபத்தான விஷ வண்டு கூடு

சுருளோட்டில் இருந்து பன்றியோடு செல்லும் சாலையோரம் ஒரு தென்னமரத்தின் ஓலையில் விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கிறார்கள். அவர்களை இந்த விஷ வண்டுகள் தாக்கி வருகின்றன. மேலும் வண்டுகள் கூடு கட்டியிருக்கும் தென்னை ஓலை காய்ந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வாறு விழும் பட்சத்தில் விஷ வண்டுகள் அந்த பகுதியில் உள்ளவர்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, இதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், சுருளோடு.

துண்டிக்கப்பட்ட சாலை

அருவிக்கரை ஊராட்சியில் வயக்கத்தாழை அம்மன் கோவில் அருகில் உள்ள வன்னியோட்டுவிளை முதல் பரளியாறு செல்லும் சாலையில் சுமார் 3 மாதம் முன்பு சாலை விரிசல் ஏற்பட்டது. தற்போது இந்த சாலை இடிந்து விழுந்து துண்டிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். சாலை இடிந்து விழுவதால் அந்த வழியாக வாகனங்களில் ெசல்ல முடியாமல் ெபாதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அர்ஜூன், மாத்தூர்.

சாலையில் உருவாகும் பள்ளம்

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சாலை உள்பக்கம் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக சாலை தோண்டப்பட்டது. அதன்பின்பு தோண்டப்பட்ட இடங்கள் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால், சாலை சேதமடைந்து பள்ளம் தோன்றியுள்ளது. இந்த பள்ளம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, தோண்டப்பட்ட இடங்களை சரியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாய்ரு, குளச்சல்.

தெருநாய்கள் தொல்லை

குழித்துறையில் உள்ள விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் தினமும் 10 முதல் 15 நாய்கள் சுற்றி திரிந்து மாணவ-மாணவிகளையும், பொதுமக்களையும் கடிப்பதற்காக துரத்துகின்றன. எனவே நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஐசக் கிங்ஸ்லின், குழித்துறை.


Next Story