'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஊரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் அமராபுரம் வரை சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருப்பதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாகவும் குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த ராஜேஷ் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

வேகத்தடை அமைக்கப்படுமா?

நெல்லை அருகே உள்ள கொண்டாநகரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஸ்ரீதிருமால்நகர் முகப்பு பகுதியில் உள்ள சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, அந்த பகுதியில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- முத்துக்குமார், ஸ்ரீதிருமால்நகர்.

குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

களக்காடு யூனியன் கீழக்காடுவெட்டி ஊராட்சி அப்பர்குளம், தெற்கு அப்பர்குளம், சிங்குளம் ஊராட்சி நடுவக்குளம், புதுக்குளம், மலையடி, தச்சன்குளம், இந்திராநகர் ஆகிய பகுதிகளுக்கு சிங்கிகுளம் பம்பிங் நிலையத்தில் இருந்து ஆற்றுத்தண்ணீர் வருகிறது. ஆனால், கடந்த 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் அந்த பகுதிகளுக்கு குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

- கருப்பசாமி பாண்டியன், அப்பர்குளம்.

பஸ் புறப்படும் நேரம் மாற்றப்படுமா?

பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படைவீட்டில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் அரசு பஸ் (தடம் எண் 12ஐ) காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது. ஆனால், கடந்த 20 நாட்களாக அந்த பஸ் காலை 8.30 மணிக்கு தான் புறப்பட்டு செல்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் அந்த பஸ்சை முன்பு போல் காலை 8 மணிக்கு இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- பிரவின் பெரியசாமி, மணப்படைவீடு.

கூடாரம் அமைக்க வேண்டும்

திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் சிகிச்சை பெற்று மாத்திரை வாங்கும் இடத்தில் வெயிலில் நின்று சிரமப்படுகின்றனர். அங்கு கூடாரம் அமைத்தால் நோயாளிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

- அல்பர்ட், திசையன்விளை.

புகாருக்கு உடனடி தீர்வு

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி செல்வமருதூர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதாக, செல்வமருதூரை சேர்ந்த ஆறுமுகநயினார் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதற்கு உடனடி தீர்வாக குடிநீர் குழாயில் உடைப்பு சரிசெய்யப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

பன்றிகள் தொல்லை

திருச்செந்தூர் யூனியன் வீரபாண்டியபட்டணம் ரூரல் ஊராட்சி பிலோமிநகரில் பன்றிகள் உலாகி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. மேலும், குப்பைகளை அள்ளாமல் தீயிட்டு கொளுத்தி வருவதால், புகைமண்டலம் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். ஆகையால் இதில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- முருகப்பெருமாள், பிலோமிநகர்.

குப்பைகள் முறையாக அள்ளப்படுமா?

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுகிராமம் மெயின் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பைகளை அன்றைய தினமே முறையாக அகற்றாததால், நாய்கள், பன்றிகள் கிளறுவதில் அவை சாலையில் வந்து கிடக்கின்றன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, குப்ைபகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

- ஜெய்லானி இக்பால், கோவில்பட்டி.

ஆபத்தான மின்கம்பம்

கோவில்பட்டி கடலையூர் ரோடு பெருமாள்நகர் 3-வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- போஸ், கோவில்பட்டி.

வெயிலில் காத்திருக்கும் மக்கள்

புதுக்கோட்டை அருகே குலையன்கரிசல் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. அங்கு மேற்கூரை இல்லாததால் ரேஷன் அட்டைதாரர்கள் வெயிலில் காத்திருந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். எனவே, அங்கு மேற்கூரை அமைத்தால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவர்.

- பாஸ்கரன், குலையன்கரிசல்.

வீணாக செல்லும் தண்ணீர்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் யூனியன் முள்ளிக்குளத்தில் இருந்து நகரம் செல்லும் சாலையோரத்தில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிெசய்ய வேண்டுகிறேன்.

- மதியழகன், முள்ளிக்குளம்.

புதர்கள் அகற்றப்படுமா?

வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலை ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் புதர்கள் மண்டி, மாணவர்கள் விளையாட முடியாத நிலையில் உள்ளது. எனவே அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேடடுக் கொள்கிறேன்.

- கலாம், ஊத்துமலை.

பராமரிப்பு இல்லாத நூலகம்

கீழப்பாவூர் யூனியன் அரியப்பபுரம் ஊராட்சி 6-வது வார்டில் அமைந்துள்ள நூலகம், பராமரிப்பு இன்றி மிகவும் ேமாசமாக உள்ளது. நூலகத்தின் உள்புறம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே நூலகத்தை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

- தமிழ்குமரன், அரியப்பபுரம்.

சேதடைந்த பஸ்கால அட்டவணை

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஸ்நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அருகில் பஸ்கால அட்டவணை உள்ளது. இந்த அட்டவணையில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் அழிந்து காணப்படுகிறது. இதனால் பஸ்கள் வந்து செல்லும் நேரம் தெரியாமல் பயணிகள் சிரமப்படுகிறார்கள். ஆகையால் சேதமடைந்த அந்த பஸ்கால அட்டவணையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- அம்ஜத், முதலியார்பட்டி.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா?

தென்காசி தாலுகா கருத்தப்பிள்ளையூர் அருேக உள்ள கடனாநதி அணையின் அழகை பார்த்து ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் குளிப்பதற்கும் அனுமதி இல்லை. எனவே அங்கு விபத்துகள் ஏற்படாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அணையை பார்த்து ரசிக்க அனுமதி வழங்குவதுடன், அணையின் ஏதாவது ஒரு பகுதியில் குளிக்கவும் அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.


Next Story