தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

குடிநீர் குழாய்களால் மக்கள் அவதி

அருமநல்லூரில் உள்ள தெருக்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இருப்பதை தான் படத்தில் பார்க்கிறீர்கள். சாலையில் குழி தோண்டி அமைக்க வேண்டிய குடிநீர்குழாய்கள் தெருக்களை அடைத்த படி அமைத்து இருப்பதால், பொதுமக்கள் நடந்து செல்லவோ, வாகனத்தில் செல்லவோ முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.எஸ்.ராஜன், நாகர்கோவில்.

வடிகால் அமைக்க வேண்டும்

நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குழியில் அம்மன் கோவிலில் இருந்து சின்ன ஆற்றங்கரை செல்லும் சாலையில் மழை நேரங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைத்து வடிகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரத், பேயன்குழி.

கழிவறை அமைக்க வேண்டும்

பார்வதிபுரம் பஸ் நிறுத்தத்தில் பாலத்தின் கீழ்பகுதியில் ஏராளமான பயணிகள் நின்று பயணித்துவருகிறார்கள் இயற்கை உபாதைகள் கழிக்க ஒருகழிவறை கூட இல்லை. இலவச கழிவறைகட்டி அல்லது கட்டண கழிப்பறை கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ஆறு சுப்பையா, பார்வதிபுரம்.

ஆபத்தான மின்கம்பம்

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் ஒரு தனியார் பள்ளி முன்பு தேசிய நெடுஞ்சாலையோரம் ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து, வளைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த பகுதியில் எப்போதும் மாணவ-மாணவிகள் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சாய்ந்து நிற்கும் மின்கம்பம் விழுந்து பேராபத்து ஏற்படும் முன்பு அதை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆல்வின் ராஜ குமார், நாகர்கோவில்.

நடவடிக்கை அவசியம்

கணபதிபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஒரு பாதை செல்கிறது. இந்த பாதை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்கிறார்கள். இந்த பாதையில் போதிய வடிகால் வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, வடிகால் வசதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிகுமார், ராஜாக்கமங்கலம்.

சுகாதார சீர்கேடு

நாகர்கோவில் புதுக்குடியிருப்பு சுப்பையார் குளம் தூர்வாரப்பட்ட போது குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட கழிவுகளை கரைப்பகுதியில் குவித்து வைத்தனர். அதன்பின்பு அந்த கழிவுகள் பல வாரங்களாக அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே உள்ளது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுகளை அங்கிருந்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.ஜோணி, நாகர்கோவில்.

குப்பைகளை அகற்ற வேண்டும்

வல்லன்குமாரன்விளை சந்திப்பில் இருந்து மறவன்குடியிருப்பு வழியாக செல்லும் கால்வாய் கரையோரங்களில் குப்பைகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.

ஆபத்தான மின்கம்பம் மாற்றப்பட்டது

தென்தாமரைகுளம் பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட இலந்தையடிவிளை பூங்கா அருகில் இருந்து வடக்கு பக்கம் பொன்னார்விளை செல்லும் சாலையில் இரண்டு மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் இருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றி புது மின்கம்பங்கள் நட்டு சீரமைத்தனர். உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story