தினத்தந்தி புகார் ெபட்டி
தினத்தந்தி புகார் ெபட்டி
குப்பை அகற்றப்படுமா?
பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலஞ்சி தபால்நிலையம் அருகே கிணறு உள்ளது. இந்த கிணற்றில் அந்த பகுதிைய சேர்ந்தவர்கள் சிலர் குப்பைகள் மற்றும் இறைச்சி, மீன் கழிவுகளை கொண்டி வந்தனர். தற்போது கிணறு முழுவதுமாக கழிவுகளால் நிரம்பி குப்பை தொட்டிபோல் காட்சி அளிக்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுகளை அகற்றி கிணற்றை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுனில்ராஜ், ஆலஞ்சி.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல ஆசாரிபள்ளம் மேல தெருவில் உள்ள காங்கிரீட் தளம் உடைந்துள்ளது. இதனால் தெருவில் மக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் இங்குள்ள கழிவுநீரோடையும் சேதமடைந்து உள்ளதால், சீராக கழிவுநீர் செல்வதில்லை. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காங்கிரீட் தளத்தையும், கழிவுநீர் ஓடையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.ராம்தாஸ், மேல ஆசாரிபள்ளம், நாகர்கோவில்.
பாதசாரிகள் அவதி
ஆரல்வாய்மொழியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் சாலையோரம் சிலர் நிரந்தரமாக நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், நடந்து செல்லும் பாதசாரிகள் நடுரோட்டில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் நடைபாதைகளில் பாதசாரிகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தண்டாயுதபாணி, ஆரல்வாய்மொழி.
மின்விபத்து அபாயம்
கேசவன்புதூர் மேலத்தெருவில் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின் கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்கம்பிகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் மிக அருகில் உரசியபடி செல்கிறது. இதனால், வீடுகளில் வசிப்போர் மின் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளின் அருகில் செல்லாத வகையில் மின்கம்பிகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அண்ணாமலை, கேசவன்புதூர்.
சுகாதாரசீர்கேடு
பத்மநாபபுரம் நகராட்சியின் உர கிடங்கானது விலவூர் பேரூராட்சி பகுதியான மருந்துக்கோட்டையில் உள்ளது, இங்கு நகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை கொண்டு வந்து உரமாக தயாரிக்கின்றனர் இந்த குப்பை கிடங்கின் வாசல் பகுதியில் மர்ம நபர்கள் குப்பை மற்றும் கழிவுகளை போட்டு சென்றுவிடுகின்றனர் இதனை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிைல உள்ளது. எனவே குப்பையை அகற்ற வேண்டும்.
-நிஜாம், மருந்துக்கோட்டை
குளத்ைத தூா்வார ேவண்டும்
புலியூர்சாலை ஊராட்சி குட்டைக்கோடு நாராயணத்துகோணம் பகுதியில் அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீரை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது குளத்தில் பாசிகள் படர்ந்தும், புற்கள் நிறைந்தும் காணப்படுகிறது. இதனால், குளத்து தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தில் படர்ந்துள்ள பாசிகளையும், வளர்ந்துள்ள புற்களையும் அகற்றி குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-ஜேம்ஸ் ராஜ், குட்டைக்கோடு.
டிரான்ஸ்பார்மர் மாற்றப்படுமா?
அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியின் முன்பு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி வரும் மாணவர்கள் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி முன்பு அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-ரெத்தினம், கொட்டாரம்.
எரியாத மின்விளக்கு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அறுகுவிளை மேற்குதெருவில் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேஷ், அறுகுவிளை.