தினத்தந்தி புகார் ெபட்டி


தினத்தந்தி புகார் ெபட்டி
x

தினத்தந்தி புகார் ெபட்டி

கன்னியாகுமரி

ஆபத்தான பள்ளம்

ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடை உள்ளது. இந்த பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. அதை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அதை சரியாக மூடாமல் விட்டு விட்டனர். இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பூதலிங்கம், ஆரல்வாய்மொழி.

விபத்து அபாயம்

குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் திருப்பங்களில் திரும்பும் போது இயக்கப்படும் சிக்னல் விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால், அந்த பஸ்களுக்கு பின்னால் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து பஸ்களிலும் சிக்னல் விளக்குகளை சீரமைத்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், சந்தையடி.

விபத்தை தடுக்க வேண்டும்

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் சந்திப்பு-செட்டிகுளம் சாலையில் இருந்து செந்தூரான்நகருக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலையின் முகப்பு பகுதியில் இருபுறமும் உள்ள கழிவுநீர் ஓடையின் மீது சிலாப்புகள் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த திருப்பத்தில் திரும்பும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே இந்த விபத்தை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையின் மீது சிலாப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், டி.வி.டி.காலனி.

நடவடிக்கை அவசியம்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டு பகுதியில் உள்ள கின்னில்தெருவில் சாலையோரம் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. அதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தீரி கென்னித்,

நாகர்கோவில்.

எரியாத விளக்குகள்

ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இருந்து இரணியல் செல்லும் சாலையில் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜாக்கமங்கலம் முதல் காக்காத்தோப்பு வரையிலான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இந்த பகுதி இருளில் மூழ்கியிருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்குகளை அகற்றி புதிய விளக்குகள் அமைத்து எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

வீணாகும் குடிநீர்

லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட சின்னமுட்டத்தில் கடலோர காவல் குழும சோதனைச்சாவடி அருகே குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 6 மாதகாலமாக குடிநீர் வீணாக செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும்.

-செல்வகுமார், தென்தாமரைகுளம்.


Next Story