'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

குண்டும், குழியுமான சாலை

திண்டுக்கல்லை அடுத்த பெருமாள்கோவில்பட்டியில் இருந்து களத்துவீடு செல்லும் இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

ஆண்டிப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டு சக்கம்பட்டி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பகிறது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

-பழனிசாமி, சக்கம்பட்டி.

குப்பை குவியல்

வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகம் சுழித்தபடியே செல்லும் நிலை உள்ளது. குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழ்பிரியன், வேடசந்தூர்.

சுத்தப்படுத்தப்படாத மேல்நிலை தொட்டி

ஆத்தூர் தாலுகா வீ.கூத்தம்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பல மாதங்களாக சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் குடிநீர் நிறம் மாறி வருகிறது. அதனை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. இதனால் மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும்.

-ராணி, வீ.கூத்தம்பட்டி.

பள்ளம், மேடாக மாறிய சாலை

தேனி புதிய பஸ் நிலையம் அருகே சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.

-செல்வேந்திரன், தேனி.

இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

செம்பட்டியை அடுத்த எஸ்.புதுக்கோட்டையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் அந்த தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டியை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ், எஸ்.புதுக்கோட்டை.

தேங்கி கிடக்கும் குப்பை

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி திருநகர், ஜிவாநகர், நேதாஜி நகர் ஆகிய இடங்களில் முறையாக குப்பைகள் அள்ளப்படுவதில்லை. இதனால் அப்பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை முறையாக அள்ளிச்செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலவன், சிவகிரிப்பட்டி.

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

உத்தமபாளையம் புறவழிச்சாலை பஸ் நிறுத்தம் அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே பழுதான உயர்கோபுர மின்விளக்கை விரைவில் சீரமைக்க வேண்டும்.

-முருகேசன், உத்தமபாளையம்.

குரங்குகள் தொல்லை

உத்தமபாளையம் ஸ்டேட் வங்கி அருகில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக வந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கின்றன. இதனால் மக்கள் உணவுப்பொருட்களுடன் வீட்டைவிட்டு வெளியே நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடித்து அகற்ற வேண்டும்.

-ஞானவேல், உத்தமபாளையம்.

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

--------------


Next Story