தினத்தந்தி செய்தி எதிரொலி: மின்கம்பங்கள் சீரமைப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி: மின்கம்பங்கள் சீரமைப்பு
x

தினத்தந்தி செய்தி வெளியானதையடுத்து மின்கம்பத்தில் படர்ந்து இருந்த செடி கொடிகளை மின் வாரிய ஊழியர்கள் அகற்றினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில் காசிநாதபுரம் செல்லும் ரோட்டில் உள்ள மின் கம்பத்தில் செடி, கொடிகள், வளர்ந்து இருந்தது

மேலும் இதே பகுதியில் 3 மின்கம்பங்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. மின் கம்பங்களை சூழ்ந்துள்ள செடி, கொடியை அகற்ற வேண்டும். சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க திருத்தணி மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.

இதையடுத்து நேற்று வெங்கடாபுரம் கிராமத்தில் மின்கம்பத்தில் படர்ந்து இருந்த செடி கொடிகளை மின் வாரிய ஊழியர்கள் அகற்றினர். மேலும் அதே பகுதியில் சேதம் அடைந்த 3 மின்கம்பங்களை மாற்றினர். நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், துணை நின்ற தினத்தந்தி நாளிதழுக்கும் இந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story