பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
x

தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி

ஈரோடு


-

வேகத்தடை முறையாக அமைக்கப்படுமா?

பவானி - மேட்டூர் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என முதல்- அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த வேகத்தடை உயரம் குறைவாக இருப்பதுடன் முறையாகவும் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வேகத்தடை முறையாக அமைப்பதுடன், அதன் மீது ஒளிரும் தன்மை கொண்ட பெயிண்டு அடிக்க வேண்டும். மேலும் அதன் அருகில் வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு பலகை வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பவானி.

ஆபத்தான குழி

கோபி சத்தி மெயின்ரோட்டில் உள்ள காலேஜ் பிரிவு ஆர்ச் அருகே குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்தும் பல மாதங்களாக குழி மூடப்படாமல் திறந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் வாகனங்களிலும், நடந்தும் செல்பவர்கள் குழி இருப்பது தெரியாமல் உள்ளே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். பேராபத்து ஏற்படுவதற்குள் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காலேஜ்பிரிவு, கோபி.

பள்ளிக்கூடம் அருகில் குப்பை

ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு பள்ளிக்கூடம் அருகில் குப்பைகள் ரோட்டு ஓரத்தில் குவிந்து கிடக்கிறது. இதனால் காற்று அடிக்கும் போது குப்பை தூசு வீட்டிற்குள் வந்து விழுகிறது. மேலும் அதிக அளவில் குப்பைகள் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளங்கோ, ஈரோடு.

ஆபத்தான பள்ளம்

ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் இருந்து மரப்பாலம் செல்லும் ரோட்டில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது இந்த பள்ளத்தில் பலர் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே ஆபத்தான இந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், ஈரோடு.

பாராட்டு

ஈரோடு சூளை முதலி தோட்டம் வெற்றி விநாயகர் கோவில் அருகில் உள்ள மின் கம்பம் இரண்டாக உடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இதுபற்றிய செய்தி தினத்தந்தி நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மின் வாரிய அதிகாரிகள் அங்கு சென்று மின் கம்பத்தை மாற்றி அமைத்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின் வாரிய அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

பொதுமக்கள், ஈரோடு.

1 More update

Related Tags :
Next Story