'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு தீர்வு; 'தினத்தந்தி'க்கு நன்றி

திண்டுக்கல் பாரதிபுரம் தபால் நிலைய சாலையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்ததாக 'தினத்தந்தி' புகார்பெட்டிக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்ததையடுத்து தற்போது அப்பகுதியில் புதிய மின்கம்பம் நட்டு வைக்கப்பட்டுள்ளது. புகாரை பிரசுரித்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

-ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.

பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பால பணி

திண்டுக்கல் சின்னையாபுரம் சி.கே.எம்.நகர் 2-வது தெருவில் சாக்கடை கால்வாய் பாலம் சீரமைப்பு பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. இதற்காக அப்பகுதியில் குழி தோண்டப்பட்ட நிலையில் கால்வாய் பாலம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பாலம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-ஹபீப் ரகுமான், திண்டுக்கல்.

கழிப்பறைகள் திறக்கப்படுமா?

பழனி பஸ் நிலையம் அருகே அடிவாரம் சாலையில் உள்ள இலவச கழிப்பறைகள் திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள், பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறை கட்டிடங்களை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசமூர்த்தி, பழனி.

அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள்

உத்தமபாளையம் தாலுகா கோம்பை பேரூராட்சி பகுதியில் சாலையோரங்களில் உள்ள மரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-அபினேஷ்வரன், கோம்பை.


Related Tags :
Next Story