'தினத்தந்தி' செய்தி எதிரொலி:சேதமான ரோடு சீரமைப்பு
'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் சேதமான ரோடு சீரமைக்கப்பட்டது.
ஈரோடு
ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள காசிபாளையம் முதல் சூரம்பட்டிவலசு சாலையில் உள்ள மலைக்கோவில் வரையுள்ள ரோடு மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது சேதமான ரோடு சீரமைக்கப்பட்டுள்ளது.
செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story