தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் இணைக்க கோரி போராட்டம்


தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் இணைக்க கோரி போராட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் இணைக்க வலியுறுத்தி, பெரியகுளம் வடகரை புதிய பஸ் நிலைய பிரிவு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் இணைக்க வலியுறுத்தி, பெரியகுளம் வடகரை புதிய பஸ் நிலைய பிரிவு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி வட்டார அதிபர் அருள்தந்தை முத்து, அருட்பணி இயக்க இயக்குனர் பெனடிக் பர்னபாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். பெரியகுளம் பங்கு தந்தை பீட்டர் சகாயராஜ் முன்னிலை வகித்தார். தேனி மறைவட்ட எஸ்.சி., எஸ்.டி. பணி குழு செயலாளர் ஜீவன்தாஸ் வரவேற்று பேசினார்.

மதுரை உயர்மறை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு செயலாளர் சந்தியாகப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் தமிழ்வாணன், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாகி குடந்தை அரசன், மே 17 இயக்கத்தின் நிர்வாகி திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் மதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் உடனடியாக இணைக்க வேண்டும். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். நீதியரசர் பாலகிருஷ்ணன் ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Related Tags :
Next Story