நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: நிரம்பும் நிலையில் வரட்டுப்பள்ளம் அணை


நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: நிரம்பும் நிலையில் வரட்டுப்பள்ளம் அணை
x

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: நிரம்பும் நிலையில் வரட்டுப்பள்ளம் அணை

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. பர்கூர் மலைப்பகுதியின் மேற்கு பகுதியான தாமரைக்கரை, தாளக்கரை, கொங்காடை பகுதிகளில் மழை பெய்யும்போது அந்த தண்ணீர் வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து சேறும். வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.46 அடி ஆகும்.

கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தாமரைக்கரை, தாளக்கரை, கொங்காடை பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 32.64 அடியாக இருந்தது. அணை தன் முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஒரு அடி தண்ணீரே தேைவ. அதனால் அணை நிரம்பும் நிலை உள்ளது. அவ்வாறு அணை நிரம்பினால் அதன் உபரிநீர் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு வந்து சேறும்.


Related Tags :
Next Story