பாம்பாறு அணை நிரம்பியது
தொடர் மழையால் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை நிரம்பியது.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பாம்பாறு அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அணை முழு கொள்ளளவான 19.60 அடியை எட்டியது. தற்போது அணைக்கு வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி 2 மதகுகள் வழியாக வரும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப் படுகிறது.இதனால் பாம்பாறு ஆற்றுப்படுகை கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire