அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது


அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது
x

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது.

அணை நிரம்பியது

அந்தியூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளுக்கும், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கும் நீர் ஆதாரமாக விளங்கி வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 4 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும் பர்கூர் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வரட்டுப்பள்ளம் அணை அதன் முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டியுள்ளது.

3-வது முறையாக...

தொடர்ந்து பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்தால் அணைக்கு வரக்கூடிய நீரானது அதிகரிக்கும். அப்போது அணையில் இருந்து உபரி நீர் அந்தியூர் பகுதியில் உள்ள கெட்டிசமுத்திரம் ஏரி மற்றும் அந்தியூர் பெரிய ஏரிகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரட்டுப்பள்ளம் அணையானது இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story